வேட்டையன் படத்தின் டப்பிங் வேலைகள் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், அப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தனக்கு தெரியவில்லை என்றும் ரஜினி கூறியுள்ளார்.
சமீபத்திக் கேரளத்துக்கு சென்ற ரஜினி அங்கிருந்து சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியன் 2 படம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், கூலி படத்தின் படப்பிடிப்பும் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும், வேட்டையன் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தனக்கு தெரியவில்லை, ஆனால் படத்தின் டப்பிங் வேலைகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் ரஜினி கூறியுள்ளார்.
கடைசியாக ஜெய்லர் படத்தில் நடித்த ரஜினி, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தின் நடித்து வருகிறார்.
‘வேட்டையன்’ படம் அக்டோபரில் வெளியாகும் என கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.