வெற்றிமாறன்
வெற்றிமாறன் @VijaySethuOffl
சினிமா

‘அன்னபூரணி’ படத்திற்கு ஆதரவளித்த இயக்குநர் வெற்றிமாறன்

யோகேஷ் குமார்

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘அன்னபூரணி’ படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கோரி நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்நிலையில் ‘அன்னபூரணி’ படம் நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்டதைக் குறித்து வெற்றிமாறன் பேசியதாவது:

“சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் உள்ள எந்தமொழி இயக்குநர்களுக்கும் கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும்.

தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புறக்காரணங்களால் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம் செய்வது திரைத்துறைக்கு நல்லதல்ல.

ஒரு படத்தை மக்களின் பார்வைக்கு அனுமதி வழங்குவதும், அனுமதிக்காமல் போவதும் தணிக்கைக்குழுவின் அதிகாரம். ஓடிடியின் இந்த செயல்பாடு தணிக்கைக்குழுவின் அதிகாரத்திற்கே மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது” என்றார்.