‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?: வெற்றி மாறன் அப்டேட் 
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?: வெற்றி மாறன் அப்டேட் | Vetri Maaran |

‘மாஸ்க்’ இசைவெளியீட்டு விழாவில் ‘அரசன்’ படப்பிடிப்பு குறித்து பேசிய இயக்குநர் வெற்றி மாறன்...

கிழக்கு நியூஸ்

மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை அறிவித்தார் வெற்றி மாறன்.

கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் படம் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் வழங்கும் இந்தப் படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் நேற்று (நவ. 9) வெளியான நிலையில், படம் நவம்பர் 21 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வெற்றி மாறன் மாஸ்க் படம் குறித்த பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் அரசன் படம் குறித்த அப்டேட் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வெற்றி மாறன், நவம்பர் 24 முதல் அரசன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவித்தார். அதற்கான செட் அமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திற்குப் பிறகு வெற்றி மாறனுடன் இணையும் படம் அரசன். விடுதலை 2-க்குப் பிறகு வெற்றி மாறன் இப்படத்தை இயக்குகிறார். சிலம்பரசனின் 49-வது படமான அரசன், தனுஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வட சென்னை’ படத்தின் கதைக் களத்திலேயே அமையவுள்ளது. இப்படத்தைக் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் நடிப்பதாகவும், கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 16 அன்று படத்தின் புரோமோ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 24-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Director Vetri Maaran has announced an update on the shooting of Arasan during his speech at the music launch event for the movie Mask.