பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் நேற்று (டிச.3) உயிரிழந்தார்.
மருதாணி, மகாலட்சுமி, பொன்னி, பாக்கியலட்சுமி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நேத்ரன்.
சின்னத்திரையில் 25 வருட அனுபவம் பெற்ற நேத்ரன், சின்னத்திரை நடிகை தீபாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேத்ரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.