சினிமா

தனுஷ் மீது விமர்சனம்: நயன்தாராவுடன் துணை நிற்கும் நடிகைகள்!

நஸ்ரியா, ஸ்ருதி ஹாசன், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் தனுஷுடன் இணைந்து படங்களில் நடித்தவர்கள்.

கிழக்கு நியூஸ்

தனுஷை விமர்சித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளார்.

"நயன்தாரா: பியான்ட் தி ஃபேரி டேல்" ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த படத் தயாரிப்பாளர் தனுஷ் ஒப்புதல் தரவில்லை என நயன்தாரா இன்று அறிக்கை வெளியிட்டார். மேலும், ஆவணப் படத்தின் டிரெய்லரில், நானும் ரௌடிதான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டதாகவும் நயன்தாரா குற்றம்சாட்டியுள்ளார்.

நயன்தாராவின் அறிக்கை நண்பகல் முதல் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாகி வந்துள்ளது. இவருடையக் கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷைக் குறிப்பிட்டு சமூக ஊடகப் பக்கங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரபல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். நயன்தாராவின் இந்தப் பதிவைப் பகிர்ந்து, நடிகை பார்வதி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்துள்ளார்.

மேலும், நடிகைகள் நஸ்ரியா, ஸ்ருதி ஹாசன், அனா பென், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, அனுபமா பரமேஸ்வரன், அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நயன்தாராவின் பதிவுக்கு இன்ஸ்டாவில் லைக் போட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இவர்களில் நஸ்ரியா, ஸ்ருதி ஹாசன், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் தனுஷுடன் இணைந்து படங்களில் நடித்தவர்கள்.

பிரபல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவாக நிற்பது மிகப் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.