சினிமா

தக் லைஃப்: வெளியீட்டு தேதி அறிவிப்பு

இன்று, கமல் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காணொளியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

யோகேஷ் குமார்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு போன்றோர் நடிக்கும் தக் லைஃப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலரும் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வெளியீட்டு தேதி, கமல் பிறந்தநாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தக் லைஃப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 5 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.