திருச்செந்தூர் 
சினிமா

திருச்செந்தூர் முருகனைக் காணக் குவியும் திரைப் பிரபலங்கள்

இன்று திருச்செந்தூரில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

யோகேஷ் குமார்

கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரைப் பிரபலங்கள் பலரும் தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திரைப் பிரபலங்கள் பலரையும் காண முடிகிறது.

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகை ரோஜா அவரது கணவர் ஆர்.கே. செல்வமணி, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகரான ரக்‌ஷன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உட்பட பலரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

அதேபோல, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இன்று திருச்செந்தூரில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனால் இனி வரும் நாட்களில் பலரும் முருகனை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.