சினிமா

சிவகார்த்திகேயனை கெளரவித்த ராணுவப் பயிற்சி மையம்!

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராகவே வாழ்ந்திருப்பதாக...

யோகேஷ் குமார்

அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்த சிவகார்த்திகேயனை சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி மையம் கௌரவித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த அமரன் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்தார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராகவே வாழ்ந்திருக்கிறார் என்று பலரும் பாராட்டிய நிலையில், அவரை சென்னையில் உள்ள ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி எனப்படும் ராணுவப் பயிற்சி மையம் கெளரவித்துள்ளது.

முகுந்த் வரதராஜன் பயிற்சி பெற்ற அந்த ராணுவப் பயிற்சி மையத்தில் சிறப்புரை ஆற்றிய சிவகார்த்திகேயன், “ராணுவ வீரர்களே இந்தியாவின் உண்மையான ஹீரோக்கள்” என்று தெரிவித்தார்.