வேட்டையன் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த கோட் மற்றும் ரஜினியின் வேட்டையன் படங்களின் முதல் நான்கு நாள் வசூல்களுடன் ஒப்பிடுகையில் கோட் படம் அதிகமாக வசூலித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 5 அன்று வெளியான கோட் படம் இதுவரை உலகளவில் ரூ. 455 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நான்கு நாள் வசூல் ரூ. 288 கோடி.
அக்டோபர் 10 அன்று வெளியான வேட்டையன் படத்தின் வசூல் நிலவரம் திங்கள் அன்று வெளியிடப்பட்டது. படம் வெளியான 5-வது நாளில் இத்தகவல் வெளியானதால் முதல் நான்கு நாள் வசூலை வெளியிட்டுள்ளார்கள் என்று கருத முடியும்.
வேட்டையன், முதல் நான்கு நாளில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல் நான்கு நாளில் வேட்டையனை விடவும் கோட் படமே அதிகமாக வசூலித்துள்ளது.