‘தங்கலான்’ டிரைலர் வெளியீடு 
சினிமா

விக்ரமின் ‘தங்கலான்’ டிரைலர் வெளியீடு!

இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருந்தார்.

யோகேஷ் குமார்

விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது.

விக்ரமின் தோற்றமும், மிரட்டலான நடிப்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜி.வி. பிரகாஷின் இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

முன்னதாக, தங்கலான் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருந்தார்.

ஆனால், படக்குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.