படம்: https://www.instagram.com/itstanya_officia
சினிமா

'பென்ஸ்' பட ஒளிப்பதிவாளரை மணக்கும் நடிகை தான்யா ரவிச்சந்திரன்! | Tanya Ravichandran

முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து...

கிழக்கு நியூஸ்

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பென்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜை மணக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இருவரும் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பலே வெள்ளையத்தேவா மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் பழைய நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் பிருந்தாவனம் படத்தில் நடித்தார். ஆனால், விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் தான்யா ரவிச்சந்திரன் பிரபலமடைந்தார். சாந்தகுமாரின் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ரசவாதியில் கவனம் பெற்றார்.

ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ், பாக்கியராஜ் கண்ணனின் பென்ஸ் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். ராகவா லாரன்ஸ், நிவின் பாலி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர் பிசி ஸ்ரீராமின் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளதாகத் தெரிகிறது.

இருவரும் தங்களுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்துள்ளார்கள். நிச்சயதார்த்த அறிவிப்பு பற்றிய பதிவின் கீழ் நடிகை சித்தி இத்னானி, நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

Tanya Ravichandran | Goutham George | Hitched | Engagement | Wedding