@DreamWarriorpic
சினிமா

சூர்யா 45: ரஹ்மான் விலகல்; புதிய இசையமைப்பாளர் யார்?

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்துக்கும் சாய் அப்யங்கர் தான் இசையமைக்கிறார்.

யோகேஷ் குமார்

நடிகர் சூர்யாவின் 45-வது படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகியப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.ஜே. பாலாஜி, சூர்யாவின் 45-வது படத்தைத் தனியாக இயக்கவுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் விலகுவதாக தகவல் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் சூர்யாவின் 45-வது படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்துக்கும் சாய் அப்யங்கர் தான் இசையமைக்கிறார்.

‘கட்சி சேர’ மற்றும் ‘ஆசக் கூட’ ஆகிய ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமானவர் சாய் அபயங்கர். இவர் பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியினரின் மகனாவார்.