படம்: https://twitter.com/immancomposer
சினிமா

பவதாரிணி மறைவு: ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

கிழக்கு நியூஸ்

இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

பவதாரிணி உடல்நலக்குறைவால் இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை காலமானார். இவரது உடல் தனி விமானம் மூலம் இன்று சென்னை வரப்படுகிறது. இவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், டி. இமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். திமுக எம்.பி. கனிமொழி, தனது கவிதையில் இளையராஜா இசையில் பவதாரிணி பாடிய 'அம்மாவின் வாசனை' எனும் வெளிவராத பாடலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.