ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான ஸ்பாட்டிஃபை, 2024-ல் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல்களில் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ பாடல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், யுவன் சங்கர் ராஜா போன்ற மிகப்பெரிய இசையமைப்பாளர்களின் பாடல்களை பின்னிக்குத் தள்ளி சாய் அபயங்கரின் பாடல் முதல் இடத்தைப் பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், ஸ்பாட்டிஃபையின் 2024-ல் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் மனிசிலாயோ, ஆச கூட, விசில் போடு, அச்சச்சோ, வாட்டர் பாக்கெட், ஹண்டர் வண்ட்டார், காத்து மேல, மட்ட, கதறல்ஸ் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் 3-வது இடத்தைப் பிடித்த ஆச கூட பாடலுக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைத்தார். டாப் 10 பாடல்களில் அனிருத் இசையமைத்த 3 பாடல்களும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த 2 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.