சிவகார்த்திகேயன் @Siva_Kartikeyan
சினிமா

3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்

கடந்த ஜூன் 2 அன்று சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு 3-வது குழந்தை பிறந்தது.

யோகேஷ் குமார்

சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு கடந்த 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் 3-வது குழந்தை கடந்த ஜூன் 2 அன்று பிறந்தது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.