படம்: https://x.com/SilambarasanTR_
சினிமா

தயாரிப்பாளரானார் சிம்பு: முழு விவரங்கள்

2020-ல் வெளிவந்த வெற்றிப் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்குப் பிறகு தேசிங்கு பெரிசாமி இயக்கும் படம் இது.

கிழக்கு நியூஸ்

பிரபல நடிகரான சிம்பு தன்னுடைய 50-வது படத்தைத் தானே தயாரித்து நடிப்பதாக இன்று அறிவித்துள்ளார்.

சிம்புவின் 41-வது பிறந்தநாளான இன்று அவருடைய இரு பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சிம்புவின் 49-வது படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். கல்லூரி மாணவராக இப்படத்தில் நடிக்கிறார் சிம்பு. பராசக்தி படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் இப்படத்தையும் தயாரிக்கிறது.

பிறந்தநாளன்று தனது தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பையும் சிம்பு வெளியிட்டுள்ளார். அட்மன் சினிஆர்ட்ஸ் என்கிற அந்த தயாரிப்பு நிறுவனம், சிம்புவின் 50-வது படத்தைத் தயாரிக்கிறது. வரலாற்றுக் கதை அம்சம் கொண்ட இப்படம் கமல் தயாரிப்பில் பெரிய பொருட்செலவில் உருவாகவிருந்தது. எனினும் இரண்டு ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு தற்போது சிம்புவின் சொந்த தயாரிப்பிலேயே வெளிவரவுள்ளது.

சிம்புவின் 50-வது படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா.

இந்தக் கதையை நம்பியதற்கு மிகவும் நன்றி. உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன் என்று தேசிங்கு பெரியசாமி இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். 2020-ல் வெளிவந்த வெற்றிப் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் இது.

சிம்புவின் கனவுப் படம் அதன் அறிவிப்பிலேயே ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.