@worldofsiddharth
@worldofsiddharth
சினிமா

அதிதி ராவுடன் திருமண நிச்சயதார்த்தம்: உறுதி செய்த சித்தார்த்

யோகேஷ் குமார்

நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்ததாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். 2021-ல் ‘மகா சமுத்திரம்’ என்கிற தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்தபோது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இருவரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

தங்களது காதல் குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்த நிலையில் சித்தார்த்தும் அதிதி ராவும் நேற்று திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் சித்தார்த் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “அவர் சம்மதம் தெரிவித்தார். நிச்சயதார்த்தம் முடிந்தது” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல அதிதியும் தனது இதே தகவலைத் தெரிவித்துள்ளார்.