சினிமா

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

10 நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கிழக்கு நியூஸ்

நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக் குறைவால் காலமானார்.

லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற சேஷு, தமிழ்த் திரையுலகில் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானத்துடன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

10 நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.