‘சர்ஃபிரா’ ஜூலை 12-ல் வெளியீடு @Suriya_offl
சினிமா

‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ ஜூலை 12-ல் வெளியீடு

இப்படத்தின் டிரெய்லர் ஜூன் 18 அன்று வெளியாகவுள்ளது.

யோகேஷ் குமார்

சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘சர்ஃபிரா’ படம் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உட்பட பலரும் நடித்தனர். இசை- ஜி.வி. பிரகாஷ்

கொரோனா காரணமாக ‘சூரரைப் போற்று’ படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்காரா இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில், அக்‌ஷய் குமார் பரேஷ் ராவல் உட்பட பலரும் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லர் ஜூன் 18 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது.