சினிமா

இனி பா. இரஞ்சித் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்: சந்தோஷ் நாராயணன்

அட்டக்கத்தி படம் உருவாகும்போது, உங்கள் இசை எனக்கு பிடிக்கவில்லை என்று பா. இரஞ்சித் கூறினார்.

யோகேஷ் குமார்

இனி பா. இரஞ்சித் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பா. இரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ், சந்தோஷ் நாராயணன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் சந்தோஷ் நாராயணன் பேசியது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

சந்தோஷ் நாராயணன் கூறியதாவது:

அட்டக்கத்தி படம் உருவாகும்போது, உங்கள் இசை எனக்கு பிடிக்கவில்லை என்று பா. இரஞ்சித் கூறினார். அதன்பிறகு நாட்டுப்புற இசை மீது கவனம் செலுத்தும்படி எனக்கு அறிவுரை வழங்கினார். நான் தற்போது இந்த நிலைக்கு உருவானதில் பா. இரஞ்சித்துக்கும் பங்கு உண்டு. இனி பா. இரஞ்சித்தின் அடுத்த படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். வேறுயாரையும் அனுமதிக்கமாட்டேன். இது என்னுடைய கட்டளை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பா. இரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாரயணன் இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலான் படங்களுக்கு இசையமைக்கவில்லை. இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், சந்தோஷ் நாராயணன் இவ்வாறு பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.