தெலுங்கு இயக்குநர் ராஜ் நிடிமொருவை நடிகை சமந்தா கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவி கோயிலில் இன்று திருமணம் செய்து கொண்டார்.
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையான சமந்தா, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்து, கடந்த 2017-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்த நிலையில், 2021-ல் இருவரும் விவகாரத்து பெற்றனர். இது திரையுலகில் பேசுபொருளானது.
அப்போது தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சிகிச்சை பெற்று வந்தார். நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபலாவை மறுமணம் செய்து கொண்டார்.
சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய சமந்தா, பேமிலி மேன், சிட்டாடல்: ஹனி பன்னி போன்ற வெப் தொடர்களில் நடித்தார். அப்போது பேமிலி மேன் இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
இந்நிலையில், இன்று கோவை கோவை ஈஷா யோகா மையத்தில், இயக்குநர் ராஜ் நிடிமொருவை சமந்தா திருமணம் செய்து கொண்டார். ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி ஆலயத்தில் இவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதையடுத்து திருமண படங்களைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா தசரகோதபள்ளி இருவரும் இணைந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார்கள். தி பேமலி மேன், ஃபார்ஸி, கன்ஸ் அண்ட் குலாப்ஸ் உள்ளிட்ட பிரபல இணையத் தொடர்களையும் தயாரித்து இயக்கியுள்ளார்கள். சமீபத்தில், தி பேமலி மேன் 3-வது பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
Telugu director Raj Nidimoru married actress Samantha today at the Linga Bhairavi Temple at the Isha Yoga Center in Coimbatore.