@samantharuthprabhuoffl
சினிமா

பிரபல நிறுவனத்தின் இணை உரிமையாளரான சமந்தா!

மன அமைதி தொடர்பான பயணத்தில் அரோமாதெரபி எனக்கு எதிர்பாராத ஆறுதலை அளித்தது.

யோகேஷ் குமார்

சீக்ரெட் அல்கெமிஸ்ட் என்ற நிறுவனத்தின் இணை உரிமையாளராக நடிகை சமந்தா இணைந்துள்ளார்.

சீக்ரெட் அல்கெமிஸ்ட் என்பது அரோமாதெரபி அடிப்படையிலான ஒரு நிறுவனம். இங்கு எண்ணெய்கள், கிரீம்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மூலம் அரோமாதெரபி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் இணை உரிமையாளராக நடிகை சமந்தா இணைந்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டுள்ளதாவது

“மன அமைதி தொடர்பான பயணத்தில் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காகச் சென்றபோது, ​​அரோமாதெரபி எனக்கு எதிர்பாராத ஆறுதலை அளித்தது.

ஒருவருக்கு நல்வாழ்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும் எண்ணெய்களின் சக்தியை நான் உணர்ந்தேன். எனது உடல்நிலையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியது, எனவே நான் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும் இங்கு நம்பகமான ஒரு பிராண்டைத் தேடினேன். அப்போதுதான் சீக்ரெட் அல்கெமிஸ்ட் பிராண்ட் குறித்து எனக்கு தெரியவந்தது.

என் மனதுக்கு பிடித்த விஷயங்களில் நான் முதலீடு செய்கிறேன். இந்த பயணத்தில் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.