சினிமா

சகுனி பட இயக்குநர் சங்கர் தயாள் காலமானார்

தான் இயக்கிய `குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்...

ராம் அப்பண்ணசாமி

கார்த்தி நடித்த சகுனி படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் சென்னையில் இன்று (டிச.19) காலமானார்.

கார்த்தி நடிப்பில் கடந்த 2012-ல் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் சங்கர் தயாள். இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் இவரது இரண்டாவது படமான `வீர தீர சூரன்’ கடந்த 2016-ல் வெளியானது.

செந்தில், யோகிபாபு ஆகியோரது நடப்பில், இவர் இயக்கியுள்ள `குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று மாலை பங்கேற்க திட்டமிட்டிருந்தார் சங்கர் தயாள். ஆனால், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சங்கர் தயாளின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.