ரவிந்தர் 
சினிமா

ரவிந்தர் இல்லாத பிக்பாஸ் என்ன செய்யும்?

இன்னும் 3 அல்லது 4 வாரங்களுக்கு ரவிந்தர் இருந்திருந்தால் போட்டி மேலும் சுவாரசியம் அடைந்திருக்கும்.

யோகேஷ் குமார்

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவிந்தர் வெளியேறியது, ஆண்கள் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் அக். 6 அன்று தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் முதல் வாரத்துக்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், அருண், செளந்தர்யா, ரஞ்சித், முத்துக்குமரன் மற்றும் ரவிந்தர் ஆகியோர் இடம்பெற்றனர். இதில் வாக்குகள் அடிப்படையில் தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவிந்தர் வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ரவிந்தர் சக போட்டியாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் முதல் வாரமே ரவிந்தர் வெளியேறியது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் துரதிர்ஷ்டம் என்றும், அவர் இன்னும் 3 அல்லது 4 வாரங்களுக்கு இருந்திருந்தால் போட்டி மேலும் சுவாரசியம் அடைந்திருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கான காரணம் ரவிந்தர் ஒரு கருத்தை முன்வைக்கும்போது, அது பலரையும் யோசிக்க வைத்தது. அதேபோல், ஆண் போட்டியாளர்களில் எதிரணிக்கு அதிக நெருக்கடி அளித்ததும் ரவிந்தர்தான்.

முதல் நாளில் அறையை விட்டுக்கொடுத்து தங்களுக்கு சாதகமாக ஒரு விஷயத்தை பெற்றது போன்ற பல செயல்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார் ரவிந்தர்.

எனவே, முதல் போட்டியாளராக ரவிந்தர் வெளியேறியது, ஆண்கள் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.