சினிமா

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணா’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

யோகேஷ் குமார்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்பட பலர் நடிக்கும் ‘ராமாயணா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதை படமாக உருவாகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். ராவணனாக யஷ் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உருவாகிறது.