கோப்புப்படம் https://x.com/rajinikanth
சினிமா

கமலுடன் நடிக்க ஆசை: ரஜினி சொன்ன தகவல் | Rajinikanth | Kamal Hassan |

அரசியல் குறித்த கேள்விக்கு “நோ கமென்ட்ஸ்” என்று பதில்...

கிழக்கு நியூஸ்

கமலும் தானும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் கோவைக்குச் சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இன்று (செப். 17) காலை ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸுடன் படம் பண்ணப் போகிறேன். இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை. கமலும் நானும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கு சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். திட்டங்கள் இருக்கிறது. இன்னும் இயக்குநர், கதை, கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை” என்று கூறினார்.

பின்னர் கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,

“ஜெயிலர் 2 படப்பிடிப்பாக வந்திருக்கிறேன். 6 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. படம் வெளியாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மேல் ஆகிவிடும்” என்றார். அப்போது செய்தியாளர்கள் “திரைக் கலைஞருக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா” என்று கேட்ட கேள்விக்கு “நோ கமென்ட்ஸ்” என்று பதிலளித்தார்.