ராயன் @sreyas88
சினிமா

தனுஷின் ராயன் 3 நாள் வசூல்: அறிவிப்பு

யோகேஷ் குமார்

தனுஷின் 50-வது படமான ராயன், திரைக்கு வந்த மூன்று நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017-ல் வெளியான ‘பவர் பாண்டி’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கிய 2-வது படம் ‘ராயன்’.

கடந்த ஜூலை 26 அன்று வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நடிப்பில் அசுரன் என்பதை மீண்டும் நிரூபித்த தனுஷ், ஓர் இயக்குநராக கலவையான விமர்சனங்களையே பெற்றார். இருப்பினும், வசூலில் ராயன் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.

ராயன் படம் முதல் மூன்று நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் 2024-ல் வெளியாகி அதிக வசூல் செய்த ஒரு சில தமிழ்ப் படங்களில் ராயனும் இணைந்துள்ளது.