புஷ்பா 2 படம் டிக்கெட் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்பட பலரும் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் புஷ்பா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படம், நாளை (டிசம்பர் 5) வெளியாகிறது.
இந்நிலையில் இப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கல்கி 2898, பாகுபலி 2, கேஜிஎஃப் 2 போன்ற படங்களின் டிக்கெட் முன்பதிவு வசூலை இப்படம் கடந்துள்ளது.
இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.