சினிமா

வசூலில் புதிய வரலாறு படைத்த புஷ்பா 2 படம்!

புஷ்பா 2 படம் ஆந்திரா, தெலங்கானாவை விடவும் வட இந்தியாவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

கிழக்கு நியூஸ்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜு நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் 6 நாள் வசூல் விவரங்கள் அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளன.

88 நாடுகளில் வெளியாகியுள்ள புஷ்பா 2 படம் முதல் ஐந்து நாள்களில் ரூ. 922 கோடியை வசூலித்து குறைந்த நாள்களில் ரூ. 900 கோடி வசூலித்த இந்தியப் படம் என்கிற சாதனையைப் படைத்தது. வேலை நாளான திங்களன்று மட்டும் ரூ. 93 கோடியை வசூலித்து அசத்தியது.

இந்நிலையில் இதன் சாதனை மகுடத்தில் மற்றுமொரு வைரமாக ரூ. 1000 கோடி வசூலை இன்று எட்டி, புதிய வரலாறு படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் முதல் 6 நாள்களில் ரூ. 1000 கோடி வசூலை அடைந்ததில்லை. இதையடுத்து புஷ்பா 2 படம் விரைவில் ரூ. 1500 கோடி வசூலை எட்டும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் புஷ்பா 2 படம் ஆந்திரா, தெலங்கானாவை விடவும் வட இந்தியாவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. 6 நாள்களில் புஷ்பா 2 ஹிந்திப் பதிப்பு மட்டும் இந்தியாவில் ரூ. 375 கோடியை எட்டியுள்ளது. இதுவரை எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் 6 நாள்களில் இந்த வசூலைக் கண்டதில்லை. இதனால் ஹிந்தியில் மட்டும் ரூ. 500 கோடி வசூலை புஷ்பா 2 படம் அள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.