பிரசாந்துக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அவரது தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நடித்த அந்தகன் படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியானது.
இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “அந்தகன் படம் வெற்றி அடைந்தவுடன் பிரசாந்துக்கு திருமணம் என்று அவர் தந்தை சொன்னார். படம் தான் வெற்றி அடைந்ததே, எப்போ சார் பிரசாந்துக்கு திருமணம்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தியாகராஜன், “எனக்கு மிகவும் மனவருத்தமான ஒரு விஷயம் பிரசாந்தின் திருமண வாழ்க்கை. நானும் அவரது அம்மாவும் அதைப் பற்றி சிந்திக்காத நாள் இல்லை. மிகவும் தீவிரமாக ஒரு நல்ல பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இனி படத்தின் வேலைகளை நிறுத்திவிட்டு அவரது திருமண வேலையை கவனிக்க வேண்டும்” என்றார்.
கே.எஸ். ரவிக்குமார் திருமணம் குறித்து பேசியபோது பிரசாந்த் வெட்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.