சினிமா

தங்கலான் ஓடிடி வெளியீட்டுக்குத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

திரையரங்குகளில் வெளியானபோது, ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது தங்கலான்.

கிழக்கு நியூஸ்

தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ல் வெளியான திரைப்படம் தங்கலாம். திரையரங்குகளில் வெளியானபோது இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தபோதிலும், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தங்கலானில் புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால், ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கலான் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.