தொழிலதிபர் ரஜித் இப்ரானுடன் காதல் உறவில் இருப்பதை நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படம் மூலம் அறிவித்துள்ளார்.
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மதுரையைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் சங்கத் தமிழன், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மென்டல் மதிலோ மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், அல வைகுந்தபுரமுலு போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.
திரைத்துறைக்கு அப்பாற்பட்டு கார் பந்தயம், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர் நிவேதா பெத்துராஜ். ஆர்வத்தோடு நில்லாமல் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிகளையும் குவித்து வந்தவர் தான் நிவேதா.
இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜித் இப்ரானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து எமோஜிகள் மூலம் காதலை உறுதிபடுத்தியுள்ளார்.
ரஜித் இப்ரான் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கும் கார் பந்தயம் மற்றும் கார்கள் மீது மோகம் அதிகம் என்பது அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்திலுள்ள பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. மாடலிங்கிலும் ஆர்வம் மிக்கவராகத் தெரிகிறது. தனது இன்ஸ்டகிராமில், "இந்த உலகம் அடுத்த வினாடிக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்" எனும் கமல் ஹாசனின் அன்பே சிவம் படத்தின் வசனத்தைக் குறிப்பாக வைத்துள்ளார்.
இருவருக்கும் நிச்சயம் நடந்தது/நடக்கவிருப்பது பற்றியோ திருமணம் குறித்த அறிவிப்போ அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Nivetha Pethuraj | Rajhithibran | Kollywood Love | Kollywood