காதலருடன் இருந்த படங்களை நீக்கிய நிவேதா பெத்துராஜ் https://www.instagram.com/nivethapethuraj/
சினிமா

காதலருடன் இருந்த படங்களை நீக்கிய நிவேதா பெத்துராஜ்: திருமணம் நிறுத்தப்பட்டதா? | Nivetha Pethuraj |

சமூக ஊடகங்களில் படங்களை நீக்கியதுடன் இருவரும் நட்பு நீக்கம் செய்துள்ளார்கள்...

கிழக்கு நியூஸ்

நடிகை நிவேதா பெத்துராஜ் தன் காதலருடன் இருந்த படங்களை நீக்கியிருப்பது அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், ‘ஒருநள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சில படங்கள் நடித்து வருகிறார். மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ், பேட்மிண்டன் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் நண்பரான ரஜித் இப்ரான் உடனான படங்களை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தியிருந்தார். ரஜித் இப்ரான் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கும் கார் பந்தயம் மற்றும் கார்கள் மீது மோகம் அதிகம் என்பது அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்திலுள்ள பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. மாடலிங்கிலும் ஆர்வம் மிக்கவராகத் தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்பட்டது. மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், திடீரென்று நிவேதா பெத்துராஜ் சமூக ஊடகங்களிலிருந்து தன் காதலரை நட்பு நீக்கம் செய்ததுடன், அவருடனான படங்களையும் நீக்கியுள்ளார். அதேபோல் ரஜித் இப்ரானும் இருவரும் இணைந்திருக்கும் படங்களைத் தன் சமூக ஊடகப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். இப்படித்தான் சமீபத்தில் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்று போனது. அதற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் அவர்கள் படங்களை நீக்கினார்கள். இதையடுத்து நிவேதா பெத்துராஜின் திருமணம் நிறுத்தப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Actress Nivetha Pethuraj's deletion of pictures with her boyfriend has raised questions among fans about whether their marriage has been called off.