நித்திலன் சாமிநாதன் @Dir_Nithilan
சினிமா

‘மகாராஜா’ இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்!

“மகாராஜா படத்தை பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது”.

யோகேஷ் குமார்

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.

இப்படம் கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து சிறந்த 10 படங்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும், ஓடிடி-யில் வெளியான முதல் இரண்டு நாட்களில் இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் நித்திலன் சாமிநாதன் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மகாராஜா படத்தை பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை மிகப்பெரிய பாராட்டாகப் பார்க்கிறேன். உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.