நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நவம்பர் 18 அன்று வெளியாக உள்ளது.
கடந்த 2022-ல் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களின் திருமண நிகழ்ச்சி ஆவணப்படமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒளிப்பரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றது.
இந்த ஆவணப்படத்தின் டீஸர் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், திருமண ஆவணப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நவம்பர் 18 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, நவம்பர் 18 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.