நாகார்ஜுனா @iamnagarjuna
சினிமா

சமந்தாவுடன் பிரிந்த பிறகு வேதனையில் இருந்தார் நாக சைதன்யா: நாகார்ஜுனா

யோகேஷ் குமார்

நல்ல நாள் என்பதால் தனது மகனின் நிச்சயதார்த்தை அவசர அவசரமாக நடத்தியதாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா இடையிலான திருமண நிச்சயதார்த்தம் நேற்று (வியாழன்) நடைபெற்றது.

நாக சைதன்யாவும், சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து 2021-ல் பிரிந்தார்கள்.

இதையடுத்து ஹிந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை சோபிதாவைக் காதலித்து வந்தார் நாக சைதன்யா.

இந்நிலையில் இருவரும் தற்போது திருமணத்துக்குத் தயாராகியுள்ளார்கள்.

நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா இதுகுறித்து டைம்ஸ் நவ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிச்சயதார்த்த நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றது. எங்கள் குடும்பம் சமீபகாலமாக சந்தோஷமாக இல்லை.

சமந்தாவுடன் பிரிந்த பிறகு வேதனையில் இருந்தார் நாக சைதன்யா.

தன் உணர்வுகளை அவர் வெளியே சொல்ல மாட்டார். ஆனால் அவருடைய நிலைமையை நான் அறிந்தேன்.

இப்போது அவர் மீண்டும் சந்தோஷமாக உள்ளார். இருவரும் நல்ல ஜோடி.

ஆகஸ்ட் 8 நல்ல நாள் என்பதால் அத்தேதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்றார்.

மேலும் பேசிய அவர், நல்ல நாள் என்பதால் நிச்சயதார்த்தை அவசர அவசரமாக செய்தோம், ஆனால் திருமணத்தை உடனடியாக நடத்தப்போவதில்லை என்றார்.