மெரி கிறிஸ்துமஸ் @VijaySethuOffl
சினிமா

வெளியானது ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் டிரைலர்

யோகேஷ் குமார்

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரைலர் வெளியானது. ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படம் ஜன. 12-ம் தேதி திரைக்கு வருகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

படத்தின் டிரைலர்ரை பார்க்கும் போது இப்படம் நகைச்சுவை கலந்த ஒரு சுவாரசியமான படமாக அமையும் என தெரிகிறது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

மெரி கிறிஸ்துமஸ் வெளிவரும் அதே தினத்தில், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் வெளியாகவுள்ளது. தனுஷ்-ன் கேப்டன் மில்லர் படமும் பொங்கலுக்கு வெளிவரும் என்று பட குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.