நடிகர் பூபதி 
சினிமா

மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | Bhupathi | Manorama |

விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் என்கிற படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

கிழக்கு நியூஸ்

மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் ஒரே மகனும் நடிகருமான பூபதி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

1955-ல் பிறந்த பூபதிக்கு தனலெட்சுமி என்கிற மனைவியும் ராஜராஜன் என்கிற மகனும் அபிராமி, மீனாட்சி என்கிற மகனும் உள்ளார்கள். விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் என்கிற படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களிலும் பூபதி நடித்தார்.

பூபதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராயர் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இறுதிச் சடங்கு நாளை மதியம் 3 மணிக்கு மேல் சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Boopathi, son of late veteran actress Manorama, passed away in Chennai at the age of 70. The actor, known for his roles in films and TV serials, is survived by his wife Dhanalakshmi, son Rajarajan, and daughters Abirami and Meenakshi. His funeral will be held tomorrow at Kannamma Pettai crematorium, Chennai.