‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தை இயக்கிய சிதம்பரம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
கடந்த பிப். 22 அன்று மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடி மேல் வசூல் செய்தது.
இதையடுத்து இந்த இலக்கை எட்டிய முதல் மலையாளப் படம் எனும் பெருமையை பெற்றது.
இந்நிலையில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தை ஃபாண்டம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், “இயக்குநர் சிதம்பரம் எங்களின் ஃபாண்டம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்” என்றது.