படம்: https://www.instagram.com/dir_dskofficial/
சினிமா

லெஜண்ட் சரவணனின் அடுத்தப் படம்: வெளியானது புதிய அறிவிப்பு!

பாயல் ராஜ்புத் முன்னணி நடிகையாக நடிக்கிறார்.

கிழக்கு நியூஸ்

லெஜண்ட் சரவணனின் அடுத்தப் படத்தினுடையப் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

தி லெஜண்ட் திரைப்படம் மூலம் திரைத் துறையில் நடிகராகக் காலடி பதித்த லெஜண்ட் சரவணன் அடுத்தப் படத்துக்காக இயக்குநர் துரை செந்தில்குமாருடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

பாயல் ராஜ்புத் முன்னணி நடிகையாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருவதாக லெஜண்ட் சரவணன் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜார்ஜியா, மும்பை, தில்லி மற்றும் மற்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகி வருவதாக் கூறப்படுகிறது. ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப் படத்தொகுப்பு செய்கிறார்.