பிரபு சாலமனின் கும்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளன.
பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ல் வெளியானது கும்கி படம். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமைய்யா உட்பட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் பலமாகப் பேசப்பட்டது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தின் இயற்கைக் காட்சிகளும், நகைச்சுவைப் பகுதிகளும் பாடல்களும் இன்றும் ரசிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கும்கி படத்தில் 2-ம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இதற்கான அறிவிப்பு மோஷன் போஸ்டர் நேற்று (செப். 11) சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டது. காடு, குட்டி யானை, மான் என அனிமேஷனில் காட்சிகள் உருவாக்கப்பட்டிருகிறது. இதையடுத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஷ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார். கும்கி படம் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், கும்கி 2 ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
Prabhu Solomon | Kumki2 | Kumki | Nivas K Prasanna |