இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 88.
நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கே.எஸ். ரவிகுமார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரின் தாயார் ருக்மணி அம்மாள் நேற்றிரவு காலமானார்.
இந்த தகவலை கே.எஸ். ரவிகுமார் தனது எக்ஸ் தளம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
வயது மூப்பு காரணமாக ருக்மணி அம்மாள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.