சினிமா

நான் சாகும் வரை உதவி செய்வேன்: கேபிஒய் பாலா | KPY Bala |

இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் நமது வேலை என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

நான் சாகும் வரை உதவி செய்வேன், அதற்கு முடிவே கிடையாது. என்று நடிகர் கேபிஒய் பாலா தெரிவித்தார்.

சென்னையில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கேபிஒய் பாலா பங்கேற்றார். அப்போது அவர் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வருவதை அறிந்த மாற்றுத் திறனாளி ஒருவர், பாலாவைக் காண வந்தார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் வாசலிலேயே அமர வைத்ததாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியை விட்டு வெளியேறியபோது மாற்றுத் திறனாளியைக் கண்ட பாலா, அவரிடம் நலம் விசாரித்து, அவருக்குப் பணம் கொடுத்து உதவினார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் கேபிஒய் பாலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உங்களைப் பற்றி பின்னால் பேசுகிறார்கள். இதனால் நீங்கள் செய்யும் உதவி தடைபடுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-

“நீங்கள் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் தனியே செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தி உரிய விளக்கத்தைக் கொடுக்கிறேன். நான் சாகும் வரை உதவி செய்து கொண்டுதான் இருப்பேன். அது கண்டிப்பாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் நமது வேலை. என் உதவிகளுக்கு முடிவே கிடையாது”

இவ்வாறு தெரிவித்தார்.