கீர்த்தி சுரேஷ் @keerthysureshofficial
சினிமா

தோழியை இழந்தேன்: கீர்த்தி சுரேஷ் கண்ணீர்!

கடந்த மாதம் வரை, கிட்டத்தட்ட 8 வருடங்களாக அவர் போராடினார்.

யோகேஷ் குமார்

நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த தன்னுடைய தோழியின் பிறந்தநாளை முன்னிட்டு, சோகமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் மறைந்த தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ், “உன்னுடைய பிறந்தநாளான இன்றும், என்றென்றும், உன்னை என்னால் மறக்க முடியாது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளதாவது

“கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமாகச் சென்றது. என்னுடைய சிறுவயது தோழி, இவ்வளவு சீக்கிரமாக எங்களை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

21 வயதில் அவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் வரை, கிட்டத்தட்ட 8 வருடங்களாக அவர் போராடினார். அவரை போல் மன உறுதி கொண்ட ஒருவரை நான் பார்த்தது இல்லை.

கடைசியாக நான் அவரை சந்தித்தபோது, இனி இந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று அழுதார். அவருடன் பேசிவிட்டு வெளியே வந்த பிறகு, நானும் அழுதேன்.

தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்காத, ஆசைகள் நிறைவேறாத, ஆயிரம் கனவுகளுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு ஏன் இப்படி நடந்தது? என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை.

தன்னுடைய கடைசி மூச்சு வரை போராடிய அவர், சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு இந்த உலகை விட்டு சென்றார். உன்னுடைய பிறந்தநாளான இன்றும், என்றென்றும், உன்னை என்னால் மறக்க முடியாது”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.