சினிமா

தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க புதிய கமிட்டி!

அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய நிர்வாகிகளைக் கொண்டு..

யோகேஷ் குமார்

தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க கூட்டு நடவடிக்கை குழு என்ற புதிய கமிட்டியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பெண்களின் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோஹிணி, “நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திரையுலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரே கமிட்டி மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய நிர்வாகிகளைக் கொண்டு கூட்டு நடவடிக்கை குழு (Joint Action Committee) என்ற புதிய கமிட்டியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.