ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்  @starwars
சினிமா

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்!

ஸ்டார் வார்ஸ் படங்களில் டார்த் வேடர், 90-களில் வெளியான தி லயன் கிங் படங்களில் முஃபாசா போன்ற கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமடைந்தார்.

யோகேஷ் குமார்

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார். அவருக்கு வயது 93.

ஸ்டார் வார்ஸ் படங்களில் டார்த் வேடர், 90-களில் வெளியான தி லயன் கிங் படங்களில் முஃபாசா ஆகிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்.

கடந்த 2011-ல் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது ஆஸ்கர் அகாடமி.

1964-ல் அறிமுகமான இவர் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதேபோல 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

இந்நிலையில் இவர் நீண்ட காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இவர் நேற்று (செப். 10) காலமானார்.

ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்சின் மறைவுக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.