அருண் விஜய், அஜித் @arunvijayno1
சினிமா

விடாமுயற்சி படத்தில் நான் நடிக்கவில்லை - அருண் விஜய்

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ படத்தில், தான் நடிக்கவில்லை என கூறினார் அருண் விஜய்.

யோகேஷ் குமார்

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ படத்தில், தான் நடிக்கவில்லை என கூறினார் அருண் விஜய்.

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அருண் விஜய், “நான் விடாமுயற்சி படத்தில் நடிக்கவில்லை. இப்படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவும் இல்லை. நான் இயக்குநர் பாலாவின் படத்தில் நடிப்பது மகிழ் திருமேனிக்கு தெரியும். ‘விடாமுயற்சி’ சிறப்பான படமாக அமையும்” என்றார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘தடம்’, ‘தடையறத் தாக்க’ ஆகிய படங்களில் நடித்துள்ள அருண் விஜய், அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருந்தார். இவை அனைத்தையும் தொடர்புபடுத்தி ‘விடாமுயற்சி’ படத்தில் அருண் விஜய் நடிப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார் அவர்.

அருண் விஜய் நடிப்பில் ‘மிஷன் - 1’ படம் ஜன.12 அன்று வெளியாகவுள்ளது.