இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் @dhanushkraja
சினிமா

தனுஷ் நடிப்பில் திரைப்படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை!

48 வருடங்களாக 1000-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி, 7000-க்கும் அதிகமான பாடல்களை இசையமைத்துள்ளார்.

யோகேஷ் குமார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்தப் படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்தப் படத்தில் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சென்னை நகரில் ஹார்மோனியப் பெட்டியுடன் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. 1976-ல் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளையராஜா. இவர் அன்றுத் தொடங்கி 48 வருடங்களாக 1000 படங்களுக்கும் மேல் பணியாற்றி, 7000-க்கும் அதிகமான பாடல்களை இசையமைத்துள்ளார்.