சினிமா

தீபாவளி அன்று மீண்டும் மக்களுடன் படம் பார்ப்பேன்: பிரதீப் ரங்கநாதன் | Dude | Pradeep Ranganathan |

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படம் பார்த்த பிரதீப் ரங்கநாதன்...

கிழக்கு நியூஸ்

சென்னையில் டூட் படம்பார்த்த கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் தீபாவளி அன்று மீண்டும் மக்களுடன் படம் பார்ப்பேன் என்று தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி பல படங்கள் திரைக்கு வந்துள்ளன. குறிப்பாக அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டூட் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இன்று படம் வெளியான நிலையில் சென்னையில் படக்குழுவினர் திரையரங்குகளில் படம் பார்த்தனர்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படம் பார்த்த பின் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது:-

“இது தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என் முதல் படம். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது என நினைக்கிறேன். தீபாவளி அன்று மீண்டும் மக்களுடன் படம் பார்ப்பேன். எந்தக் காட்சி நன்றாக இருந்தது என்பதை எல்லாம் மக்களும் விமர்சகர்களும் சொல்வார்கள்” என்றார்.