விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம்! @Laxmi Kanth
சினிமா

‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம்!

அடுத்ததாக விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

யோகேஷ் குமார்

குட் நைட் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘குட் நைட்’. இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விநாயக் சந்திரசேகரனுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நேற்று இவருக்கு திருமணம் நடைபெற்றது. குட் நைட் படக்குழுவினர், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.

அடுத்ததாக விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.